அழகான முகம் பெற இளம் பெண் எடுத்த விபரீத முடிவு! வீடியோவைக் கண்டு அதிர்ச்சியடைந்த இணையவாசிகள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

தாய்வான் நாட்டைச் சேர்ந்த மொடல் அழகி ஒருவர் சிறிய முகம் பெறுவதற்காக அவர் மேற்கொண்டுள்ள முயற்சி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்வான் நாட்டை சேர்ந்த BearGenie. பிரபல மொடலான இவர் கடந்த புதன் கிழமை தன் முகம் முழுவதும் ஊசியாள் குற்றி சிகிச்சை பெறும் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதைக் கண்ட அவரது ரசிகர்கள் நன்றாக இருந்த BearGenie-க்கு என்ன ஆச்சு, அவரது முகத்தில் ஏன் இப்படி உசியால் குற்றப்பட்டுள்ளது என்று அதிர்ச்சியடைந்தனர்.

இன்னும் சிலர் வேடிக்கையாக 32 வயது முள்ளப்பன்றியை பார்பது போல் உள்ளது எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

அதன் பின் இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்திருந்த தகவலில், தாய்வானில் முகத்திற்கு மசாஜ் செய்யும் bone-toning என்ற அக்கு பஞ்சர் முறை டிரண்ட் ஆகி வருகிறது.

இது மிகவும் வலியை ஏற்படுத்துக் கூடிய முறை, அதில் தான் தற்போது BearGenie இறங்கியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கி, கடந்த பிப்ரவரி மாதம் வரை BearGenie இந்த சிகிச்சை பெற்று வருவதாகவும், சமீபத்தில் வெளியான FHM-ன் Top 100 Sexiest Woman in Taiwan என்னும் பட்டியலில் முதல் இடம் பிடித்த பெண் சிறிய முகம் கொண்டிருந்தார் எனவும், தானும் இந்த இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக அவர் தனது முகத்தை சிறிதாக்க BearGenie, அக்குப்பஞ்சர் உதவியை நாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்