நியூசிலாந்து மசூதிகளில் சரமாரி துப்பாக்கி சூடு! பதறியடித்து ஓடிய மக்கள்.. எங்கு பார்த்தாலும் சடலங்கள்!

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

நியூசிலாந்தின் Christchurch நகரில் உள்ள இரண்டு மசூதியில் புகுந்த 2 மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் பலர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவமானது வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி மதியம் 1.40க்கு நடந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிசார் ஒருவரை கைது செய்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திய மசூதியில் இருந்த நபரான இப்ராஹிம் என்பவர் கூறுகையில், நான் உட்பட 200க்கும் அதிகமானோர் மசூதியில் இருந்த போது கட்டிடத்தின் பின் பக்கமாக துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் சரமாரியாக சுட தொடங்கினான்.

எங்களில் பலர் உயிர் பிழைக்க சுவர் ஏறி குதித்து வெளியேறினோம்.

நான் இருந்த மசூதியின் அருகிலேயே இன்னொரு மசூதி உள்ளது, அங்கிருந்து என் நண்பர் எனக்கு போன் செய்தார்.

அந்த மர்ம நபர் அந்த மசூதியிலும் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினான் என என்னிடம் கூறியதோடு இதில் ஐந்து பேர் இறந்ததாக கூறினார் என தெரிவித்துள்ளார்.

இதனிடையில் வங்கதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாட Christchurch நகரில் தான் தற்போது உள்ளனர்.

சம்பவம் நடந்தபோது வங்கதேச வீரர்கள் யாரும் மசூதியில் இல்லை என தெரியவந்துள்ளது.

சம்பவம் நடந்த மசூதி அருகில் வசிக்கும் பெனிகா என்பவர் கூறுகையில், கருப்பு நிற உடையணிந்த நபர் மசூதிக்குள் துப்பாக்கியுடன் புகுந்தான்.

பின்னர் சரமாரியாக துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. அந்த இடத்தில் பலர் சடலமாக கிடப்பதை பார்த்தேன்.

துப்பாக்கி சூடு நடத்தியபின் அந்த மர்ம நபர் தப்பியோடினார் என கூறியுள்ளார்.

இதனிடையில் இந்த சம்பவத்தில் மொத்தம் எத்தனை பேர் இறந்தார்கள் என்ற விபரத்தை பொலிசார் இன்னும் வெளியிடவில்லை.

துப்பாக்கி சூடு நடத்திய இருவரில் ஒருவர் சம்பவத்தை பேஸ்புக்கில் நேரலை செய்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நகரில் வசிக்கும் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் உள்ளேயே பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதோடு நகரில் உள்ள அனைத்து மசூதிகளையும் மூட சொல்லி பொலிசார் உத்தரவிட்டுள்ளனர்.

இதனிடையில் துப்பாக்கி சூடு நடத்திய ஒரு நபரின் பெற்றோர் பிரித்தானியர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பாக பேசிய நியூசிலாந்து பிரதமர் ஜேசிண்டா ஆர்ட்ரன், நியூசிலாந்து வரலாற்றில் இன்றைய தினம் ஒரு கருப்பு தினமாக மாறியுள்ளது. மசூதிக்குள் வழிபாடு நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...