துப்பாக்கி சூடு நடத்திய நபரின் புகைப்படம் வெளியானது... அவன் பெற்றோர் பிரித்தானியாவை பூர்வீகமாக கொண்டவர்கள் என திடுக்கிடும் தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

நியூசிலாந்தில் உள்ள இரண்டு மசூதிகளில் துப்பாக்கி சூடு நடத்தியவனின் புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில் அவன் பெற்றோரின் பூர்வீகம் பிரித்தானியா என தெரியவந்துள்ளது.

நியூசிலாந்தின் Christchurch நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் வெள்ளிக்கிழமை மதியம் உள்ளூர் நேரப்படி 1.30 மணிக்கு இரண்டு மர்மநபர்கள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

இதில் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து பொலிசார் இன்னும் தெரிவிக்கவில்லை.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவனின் பெயர் Brenton Tarrant என்று தெரியவந்துள்ள நிலையில் அவன் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதில் தொடர்புடைய ஒருவரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில் இன்னொருவனை தேடி வருகிறார்கள்.

இதில் Brenton யார் என இன்னும் தெரியவில்லை.

Brenton பெற்றோர்கள் பிரித்தானியா மற்றும் ஸ்காட்லாந்து சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் பிறந்த அந்த நபர் தாக்குதல் நடத்துவதற்கு முன்னரே ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளான்.

அதில், தீவிரவாத தாக்குதலில் ஆயிரக்கணக்கான ஐரோப்பியர்கள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்க நினைத்தேன்.

நம்முடைய நிலங்கள் ஒருபோதும் அவர்களுக்கு சொந்தமாகாது,

வெள்ளை நிற மனிதர்கள் வாழும் வரை நமது நிலத்தை யாரும் ஆக்கிரமிக்க முடியாது. நம்முடைய மக்கள் இடத்தில் அவர்கள் எப்போதும் வர முடியாது.

ஆம் இது ஒரு பயங்கரவாத தாக்குதல் தான்! ஆனால் ஒரு ஆக்கிரமிப்பு படைக்கு எதிரான நடவடிக்கை என்று நான் நம்புகிறேன்.

துப்பாக்கியை நான் கையாண்டதை பெருமையாக கருதுகிறேன், ஏனெனில் இதன் மூலம் அமெரிக்க அரசியலில் எனது செல்வாக்கை செலுத்த முடியும்.

நாட்டை ஆக்கிரமிப்பவர்கள் மற்றும் துரோகிகளை நான் கொல்வேன் என நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்