சிறையில் அடைக்கப்பட்ட சிங்கம்: தென் ஆப்பிரிக்காவில் நடந்த வினோத சம்பவம்

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்

தென் ஆப்பிரிக்காவில் மிருகக்காட்சி சாலையில் இருந்து தப்பியோடிய சிங்கம் மீண்டும் பிடிபட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட வினோத சம்பவம் நடந்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் Karoo National Park லிருந்து இளவயது சிங்கமொன்று கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக தப்பிச் சென்றது.

கடந்த புதன்கிழமை சிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் ஹெலிகொப்டர் மூலம் சதர்லேண்ட் காவல் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு ஒருநாள் சிறையில் அடைத்து வைக்கப்பட்டது.

இதுகுறித்து காவல் நிலைய அதிகாரி கூறுகையில், சிங்கம் மிக ஆரோக்கியமாக இருக்கிறது.

வரலாற்றிலேயே முதன்முறையாக சிங்கத்தை சிறையில் அடைத்தது இதுவாகத்தான் இருக்கும்.

நல்லவேளையாக அன்றைய தினம் மனிதர்கள் யாரையும் சிறையில் அடைக்க வேண்டிய சூழல் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.

தற்போது சிங்கத்துக்கு இரண்டு வயதாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் அதனுடைய இருப்பிடத்துக்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்