பொருட்களை பிரிப்பதில் சண்டை – பொலிஸ்க்கு பயந்து 3வது தளத்திலிருந்து குதித்த திருடன்

Report Print Abisha in ஏனைய நாடுகள்

பாரிஸ்சில் முக்கிய பகுதியில்குடியிருப்பில் திருட சென்று திரும்பும் நேரத்தில் பொருட்கள் பிரிப்பதில் பிரச்சனை ஏற்பட்டு பொலிஸில் சிக்கி திருடன் மூன்றாவது தளத்திலிருந்து கீழே குதித்தம் சம்பவம் நடைபெற்றுள்ளது.

புதன்கிழமை, அன்று பாரிஸ்சின் rue Cauchy வீதியில் உள்ள அடுக்குமாடி வீடு ஒன்றில் நபர் ஒருவர் ஓய்வெடுத்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது கட்டிடத்தின் எதிரில் உள்ள மற்றொரு கட்டிடத்தில் சில நபர்கள் சத்தமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதை தனது வீட்டின் கழுகு கண்கள் ஊடாக பார்த்துள்ளார்.

அப்போது அவருக்கு அங்க நிற்பர்கள் அந்நியர்கள் போல் தோன்றியதால், உடனடியாக காவல்துறையினருக்கு அழைத்து, தகவலை தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த காவல்துறையினர், அங்கு இருந்த நால்வரை கைது செய்தனர். இந்நிலையில் அவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் நால்வரும் கொள்ளையர்கள் எனவும், கொள்ளையிட்ட பொருட்களை பங்கு பிரிப்பதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதுதெரியவந்துள்ளது.

இதில் நான்கு திருடர்களையும், தப்பிக்க முயன்றுள்ளனர். இதில் மூவரைபிடித்த பொலிசார், நான்காவது நபரை தப்பிக இயலாத வகையில் தடுத்ததால், மூன்றாவது தளத்தில் இருந்துகீழே குதித்துள்ளார். வெற்று தரையில் விழுந்த திருடனின் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில்சேர்த்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers