துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பயமின்றி தைரியமாக பிடித்த ரியல் ஹீரோ: வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

நியூசிலாந்தில் துப்பாக்கி சூடு நடத்திய விவகாரத்தில் தொடர்புடைய ஒருவரை பொலிசார் தைரியமாக கைது செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

நியூசிலாந்தின் Christchurch நகரில் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி மதியம் 1.40 மணிக்கு மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 49 பேர் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக 4 பேரை பொலிசார் இதுவரை கைது செய்துள்ளனர்.

இதில் ஒருவனை பொலிசார் தைரியமாக கைது செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

அதில், சாலையில் ஓரத்தின் கார் ஒருபக்கமாக சாய்ந்தபடி நின்ற நிலையில் கார் உள்ளே துப்பாக்கி சூட்டில் சம்மந்தப்பட்ட நபர் உள்ளான்.

அவனிடம் சக்தி வாய்ந்த ஆயுதம் இருக்கும் என தெரிந்தும் இரண்டு பொலிசார் அருகில் சென்று துப்பாக்கியை காட்டி அவனை கீழே இறங்க சொன்னார்கள்.

அதில் ஒரு பொலிஸ் அதிகாரி கார் உள்ளே சென்று உள்ளிருந்த நபரை வெளியில் இழுத்தார். பின்னர் அவனை அதிரடியாக கைது செய்தார்.

பொலிசாரின் கார், தாக்குதலில் தொடர்புடைய நபரின் காரின் மீது மோதியதை அடுத்தே அந்த கார் ஒரு பக்கமாக சாய்ந்து சாலை ஓரத்தில் நின்றது.

பின்னர் தான் இந்த கைது நடவடிக்கை பாய்ந்தது.

இது சம்மந்தமான வீடியோ வைரலாகியுள்ள நிலையில் அந்த நபரை தைரியமாக பிடித்த பொலிஸ் அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்