எத்தியோப்பிய விமானம்: ஸ்டெபிளைசர் அசாதாரண நிலையில் இருந்ததாக தகவல்

Report Print Abisha in ஏனைய நாடுகள்

விபத்துக்குள்ளான எத்தியோபியன் ஏர்லைன்ஸ்க்குசொந்தமான விமானத்தின் வால் பகுதியை இயக்கும் ஸ்டெபிளைசர் அசாதாரண நிலையில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த மார்ச் 10ஆம் திகதி எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமானவிமானம் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கியதில் 157 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர்.

இந்நிலையில் விழுந்து நொறுங்கிய விமானங்களின் பாகங்கள் சேகரித்து ஆய்வு நடைபெற்று வருகின்றது.

இதில் குறிப்பாக கடந்த ஆண்டு அக்டோபரில் போயிங் 737 மேக்ஸ் ரகத்தைச் சேர்ந்த லயன் ஏர் விமானம் விபத்தில் சிக்கி 189 பேர் உயிரிழந்தனர். அதில் கிடைத்த விமானத்தின் பின்பகுதி பாகத்தின் கிடைமட்ட வால் பகுதியை இயக்கும் ஸ்டெபிளைசர் பாகம் அசாதாரண நிலையில் இருந்தது.

அதேபோல் எத்தியோபியாவில் 157 பேரின் உயிரைப் பறித்த அதே ரக விமானத்தில் பின்பகுதி பாகத்தில் உள்ள கிடைமட்ட வால் பகுதியை இயக்கும் ஸ்டெபிளைசர் அதேபோன்ற அசாதாரண நிலையில் இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...