தீவிரவாதி சுட்டதில் மகன்களை கட்டியணைத்து குண்டுகளை முதுகில் சுமந்து போராடிய தந்தை: ரத்த வெள்ளத்தில் விழுந்த பரிதாபம்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் இரு மசூதிகளில் நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் உயிரிழந்தனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய நபர் அதைத் தன் தலையில் பொருத்தி இருந்த அதிநவீன கமெராவில் படம் பிடித்து ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் நேரலையாக ஒளிபரப்பினார்.

இது உலகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த துப்பாக்கிசூட்டின் போது துபாயை சேர்ந்த தொழிலதிபர் தனது மகன்களை காப்பாற்றுவதற்காக குண்டுகளை முதுகில் சுமந்து பெரும் காயத்திற்கு ஆளாகியுள்ளார்.

துபாயில் வசித்து வரும் ஈராக் நாட்டை சேர்ந்த தொழில் அதிபர், அதீப் சமி தனது மகனின் பிறந்தநாளை முன்னிட்டு நியூசிலாந்துக்கு சென்றுள்ளார்.

2 மகன்களுமாக கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது , தீவிரவாதி திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளான். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அதீப் சமி தனது இரண்டு மகன்களையும் காப்பாற்றுவதற்காக அவர்களை இறுக

கட்டியணைத்துக்கொண்டு குண்டுகளை தனது முதுகில் வாங்கிகொண்டார்.

குண்டு பாய்ந்ததால் படுகாயமடைந்த அதீப் சமி ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இரண்டு மகன்களும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...