துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து நியூஸிலாந்து பிரதமர் எடுத்துள்ள அதிரடி முடிவு!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

அவுஸ்திரேலியர் ஒருவர் நியூஸிலாந்து மசூதியில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 49 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து நாட்டின் துப்பாக்கி விதிகளை கடுமையாக்கப்போவதாக நியூஸிலாந்து பிரதமர் உறுதியளித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் ஐந்து துப்பாக்கிகளையும் சட்டப்படிதான் வாங்கியுள்ளார் என்பதோடு, கைது செய்யப்பட்டவர்களில் யாருமே பொலிசாரால் குற்றவாளிகளாக அறியப்பட்டவர்கள் இல்லை.

பிரெண்டன் என்னும் அவுஸ்திரேலியர், நியூஸிலாந்தில் உள்ள மசூதி ஒன்றில் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 49 பேர் உயிரிழந்ததோடு, 40க்கும் மேலானோர் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய நியூஸிலாந்து பிரதமர் Jacinda Ardern, துப்பாக்கிச் சூடு நடத்திய பிரெண்டன், ஐந்து துப்பாக்கிகளை பயன்படுத்தியுள்ளதாகவும், அவற்றில் இரண்டு செமி ஆட்டோமேட்டிக் ஆயுதங்கள் என்றும், இரண்டு ஷாட்கன் வகை துப்பாக்கிகள் என்றும் ஒன்று லீவர் உதவியுடன் இயங்கும் ஆயுதம் என்றும் தெரிவித்துள்ளதோடு, பிரெண்டன், A வகை துப்பாக்கி உரிமம் பெற்றே அந்த துப்பாக்கிகளை வாங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

உரிமமும் பெற்று ஆயுதங்களும் வாங்கியதை தொடர்ந்து நடைபெற்ற இந்த தொடர் நிகழ்வுகள் தொடர்பாக நடவடிக்கைகள் தொடங்கி விட்ட நிலையில், நம் துப்பாக்கி விதிகள் மாறும் என நான் உங்களுக்கு இப்போதே உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என்றார் அவர்.

இதற்கிடையில் கைது செய்யப்பட்டுள்ள மற்ற இருவர் மீதும் இதற்கு முன் எந்த வழக்கும் இல்லை என்பதோடு அவர்கள் பொலிசாரின் கண்காணிப்பு பட்டியலிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காவதாக கைது செய்யப்பட்ட நபர், பொதுமக்களில் ஒருவர் என்றும் பொலிசாருக்கு உதவுவதற்காக அவர் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். மற்ற இருவர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்