நியூஸிலாந்தில் அவசர அவசரமாக தோண்டப்படும் கல்லறைகள்: சோகப்பின்னணி!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

நியூஸிலாந்தின் கிறைஸ்ட் சர்ச் நகரின் இஸ்லாமிய சமுதாயம், 49 இறுதிச் சடங்குகளை நடத்த வேண்டியுள்ளதையடுத்து அவசர அவசரமாக குழி தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

இத்தனை கல்லறைகளை சிறு கருவிகள் மூலம் தோண்டுவது கடினம் என்பதால், இன்னும் சில மணி நேரங்களில் பல இறுதிச் சடங்குகள் நடக்கவிருப்பதையடுத்து, பெரிய இயந்திரங்களை பயன்படுத்தி பணியாளர்கள் குழி தோண்டும் நடவடிக்கையில் பரபரப்பாக ஈடுபட்டுள்ளனர்.

இஸ்லாமிய பாரம்பரியப்படி இறந்தவர்களை 24 மணி நேரத்திற்குள் அடக்கம் செய்து விட வேண்டும் என்பதால் அவர்கள் வேகமாக இயங்கி வருகிறார்கள்.

இப்படி ஒரு இறுதிச்சடங்கை தாங்கள் இதுவரை பார்த்ததில்லை என்கிறார்கள் உள்ளூர் இஸ்லாமிய மதத்தலைவர்கள்.

இந்நிலையில் ஏராளமானோர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களுக்கு கண்ணீர் மல்க தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்