கால்வாயில் கிடந்த பெரிய பிளாஸ்டிக் பைகள்: துண்டுகளாக நறுக்கப்பட்டிருந்த 19 பேரின் சடலங்கள்! தீவிரமடையும் விசாரணை

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

மெக்சிகோவில் கழிவுநீர் வாய்க்காலில் கிடந்த பிளாஸ்டிக் பைகளில் இருந்து, ஒரு பெண் உட்பட 19 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோவில் குவாடாலஜாராவின் கிழக்குப் பகுதியிலுள்ள Ixtlahuacán de los Membrillos நகரத்தில் உள்ள கால்வாயில் கடந்த வியாழக்கிழமையன்று பிளாஸ்டிக் பைகள் மிதந்துள்ளன. இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த ஒருவர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள், நீரில் கிடந்த பைகளை வெளியில் எடுத்து சோதனை மேற்கொண்டனர்.

அதில் ஒரு பெண் மற்றும் 18 ஆண்களின் சடலம் இருப்பது அடையாளம் கண்டறியப்பட்டது. இதனையடுத்து ஜாலிஸ்கோவின் அட்டர்னி ஜெனரல் அலுவலக தடயவியல் வல்லுனர்கள், முழு உடல்களையும் பரிசோதிப்பதோடு, பாதிக்கப்பட்டவர்கள் காணாமல் போயிருந்தார்களா என்பதையும் உறுதிப்படுத்தும் விதத்தில் விசாரித்து வருகின்றனர்.

வியாழக்கிழமை இரவு, பாதுகாப்பு நோக்கங்களுக்காக தேடுதல் நடவடிக்கை நிறுத்தப்பட்டது, வெள்ளிக்கிழமை காலை மீண்டும் பணி தொடர்ந்துள்ளதாக அட்டர்னி ஜெனரல் அலுவலக அதிகாரி கூறியுள்ளார்.

இதில் 10 பேர் மட்டும் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் மீது மட்டும் வழக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருமே குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்களா என்பதை தீர்மானிக்க முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போதை மருந்து கும்பல்களுக்கிடையே நடந்த தாக்குதலில் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்