நியூசிலாந்து துப்பாச் சூடு நடத்தியவனின் கண்களை பார்த்தேன்..அதன் பின் என திகில் நிமிடங்களை விளக்கிய இளைஞன்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

நியூசிலாந்தில் நடந்த துப்பாக்கிசூடு சம்பவத்தினை நேரில் பார்த்து, அதிலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியது எப்படி என்பதைப் பற்றி இளைஞர் ஒருவர் கூறியுள்ளார்.

நியூசிலாந்தில் இருக்கும் இரண்டு மசூதிகளில் அவுஸ்திரேலியாவை பிரண்டன் டாரண்ட் என்ற நபர் நடத்திய வெறித்தனமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தற்போது வரை 50-பேர் பலியாகியுள்ளனர்.

காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பிரண்டன் டாரண்ட்டிடம் இருந்து தப்பியது எப்படி என்பதை வங்கதேசத்தைச் சேர்ந்த Monir Hossain என்ற 36 வயது நபர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு கூறியுள்ளார்.

நானும் என் நண்பரும் தாக்குதல் துப்பாக்கிச் சூடு நடந்த Al Noor மசூதியின் உள்ளே இருந்தோம். அப்போது திடீரென்று உள்ள வந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

முதலில் நாங்கள் அவரை பொலிசார் என்று நினைத்தோம், நாங்கள் நினைத்தது போன்றே அங்கிருந்தவர்களும் பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்துகிறார் என்ற பீதியில் உயிரைக் காப்பாற்றி கொள்ள அங்கும், இங்கும் ஓடினர்.

ஏனெனில் அவரின் உடை பொலிசார்(camouflage) அணியும் உடை போன்று அணிந்திருந்தார். அதன் பின் நாங்கள் வெளியில் செல்லும் பகுதிக்கு ஓடினால் அங்கும் பூட்டப்பட்டிருந்தது.

அப்போது ஒருவர் அங்கிருந்த ஜன்னலை உடைத்து தப்பிக்க முயற்சித்து கொண்டிருந்தார். நான் அங்கு வேகமாக ஓடினேன், அதன் பின் அந்த நபர் சாலைக்கு வெளியில் வந்தும் தூப்பாக்கியால் சுட்டான், நான் அவனுடைய கண்ணைப் பார்த்தேன்.

உடனடியாக அவன் எங்களை நோக்கி சுட ஆரம்பித்தான், நான் அதிர்ஷ்டவசமாக தப்பிவிட்டேன். ஆனால் என்னிலிருந்து சுமார் 2 அடி தூரத்தில், என்னுடைய நண்பன் ஓமர் கீழே விழுந்து இறந்துவிட்டான் என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்