தீவிரவாதி செய்த ஒரு சிறு தவறால் உயிர் தப்பியவர் கூறும் பதறவைக்கும் செய்தி!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

நியூஸிலாந்து மசூதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிரவாதி, இரண்டாவது மசூதியில் நுழையும்போது செய்த ஒரு சிறு தவறு பல உயிர்களைக் காத்ததாக உயிர் பிழைத்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

லின்வுட் மசூதிக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிரவாதி, மசூதியில் மக்கள் தொழுகை நடத்தும் அறையின் முன் வாசல் வழியாக நுழையாமல், பின் வாசல் வழியாக நுழைந்ததால் பலர் உயிர் தப்பியதாக, உயிர் தப்பியவர்களில் ஒருவரான Mohammed Akheel Uddin என்பவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரெண்டன் என்பவன் கிறைஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளில் தாக்குதல் நடத்தியதில் தொழுகை செய்ய வந்திருந்த 50 பேர் உயிரிழந்தனர்.

முதலாவது ஜன்னல் ஒன்றின் மீது துப்பாக்கியால் அவன் சுட்டதையடுத்து, கட்டிடத்தின் பின் பகுதியில் இருந்தவர்கள் ஏதோ நடக்கிறது என்று உஷாராகியுள்ளனர்.

அந்த நபர் மட்டும் முன் பக்க வாசல் வழியாக நுழைந்திருப்பானென்றால், பலியானவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாகியிருக்கும் என்கிறார் Mohammed Akheel Uddin.

எனது தொழுகையை பாதியில் நிறுத்திய நான், ஜன்னல் வழியாக பார்த்தபோது, மூன்று பேர் இறந்து கிடந்ததைக் கண்டேன்.

உடனே எல்லோரும் தரையில் படுங்கள், வெளியே ஏதோ நடக்கிறது என்று நான் கூறும்போது, அந்த தீவிரவாதிக்கும் எனக்கும் இடையில் எட்டு அடி தூரம் மட்டுமே இருந்தது என்கிறார் Mohammed Akheel Uddin.

அவன் உள்ளே வருவதற்குள் நாங்கள், ஒளிந்து கொண்டோம் என்று கூறும் Mohammed Akheel Uddin, அது ஒரு திகிலூட்டும் அனுபவமாக இருந்தது, அவன் மட்டும் முன் வாசல் வழியாக வந்திருப்பானென்றால், இந்நேரம் நாங்கள் உயிருடன் பேசிக்கொண்டிருக்க மாட்டோம் என்கிறார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்