பணிப்பெண்ணை உள்ளாடையை வைத்து வீட்டை சுத்தம் செய்யவைத்த தம்பதி... வாந்தியை சாப்பிட வைத்த கொடூரம்.. பகீர் பின்னணி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

மியான்மரை சேர்ந்த பெண் சிங்கப்பூரில் தம்பதியால் கொடுமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மியான்மரை சேர்ந்தவர் மோ மோ தன் (32). இவர் சிங்கப்பூரில் உள்ள தேய் வி கியாட் மற்றும் சியா யுன் லிங் ஆகிய தம்பதியின் வீட்டில் கடந்த 2012-ஆம் ஆண்டு வேலை செய்தார்.

அப்போது தம்பதிகள் மோ-வை மிக மோசமாக கொடுமைப்படுத்தியுள்ளனர்.

அதாவது சிறிதளவு மட்டுமே உணவு கொடுத்து பட்டினி போட்டனர்.

மேலும் அரிசி சாதம் மற்றும் சர்க்கரை கலந்த உணவை வலுக்கட்டாயமாக பணிப்பெண் மே-வுக்கு தேய் மற்றும் தியா கொடுத்துள்ளனர்.

இதன் காரணமாக அவர் வாந்தி எடுத்துள்ளார். பின்னர் வாந்தியை மே எடுத்து சாப்பிடும் படி அடித்து உதைத்துள்ளனர்.

இதோடு அந்த பெண்ணின் உள்ளாடையை வைத்தே வீட்டை சுத்தம் செய்ய அவர் மிரட்டப்பட்டுள்ளார்.

இப்படியான துன்புறுத்தல்களை மே அனுபவித்து வந்த நிலையில் பொலிசாருக்கு இது குறித்து தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து பணிப்பெண் மே-வை கொடுமைப்படுத்திய தேய் மற்றும் தியா கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீதான வழக்கு விசாரணை வருடக்கணக்கில் நடந்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வந்துள்ளது.

அதன்படி தேய்க்கு 24 மாதங்கள் சிறை தண்டனையும், அவர் மனைவி தியாவுகு 47 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதே போல இந்தோனேசியாவை சேர்ந்த பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக இதே தம்பதிக்கு கடந்த 2017-ல் சிறை தணடனை விதிக்கப்பட்டது.

ஆனால் இதை இன்னும் அவர்கள் அனுபவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்