திருமணம் ஆகாத ஜோடிகள் செய்த செயல்..பொது இடத்தில் குழந்தைகள் முன் கொடுக்கப்பட்ட மோசமான தண்டனை

Report Print Santhan in ஏனைய நாடுகள்

இந்தோனேஷியாவில் திருமணமாகத ஜோடிகள் பொது இடத்தில் எல்லை மீறி நடந்து கொண்டதால், அவர்களுக்கு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் முன்பு கசையடி தண்டனை கொடுக்கப்பட்டது.

இந்தோனேஷியாவில் அதிகபடியான இஸ்லாமியர்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு ஷரியத் என்ற சட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது.

அதாவது பொது இடங்களில் திருமணமாகத ஜோடிகள் கைகளை பிடித்துக் கொண்டு நடப்பது குற்றம், அதுமட்டுமின்றி திருமணம் ஆகாத ஜோடிகள் திருமணத்திற்கு முன்பே உறவு வைத்துக் கொள்வது குற்றம் போன்ற பல கட்டுப்பாடுகள் உள்ளன.

இந்நிலையில் இங்கிருக்கும் ஏகெக் மாகாணத்தின் தலைநகரான பந்தாக்கில் 5 திருமணமாகாத ஜோடிகள் பொது இடத்தில் எல்லை மீறி நடந்து கொண்டதால், அவர்களை பொலிசார் கைது செய்தனர்.

அவர்கள் பொதுஇடம் என்று பார்க்காமல் கட்டிப் பிடித்து இருந்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் விசாரணைக்கு பின் அவர்களுக்கு கசையடி தண்டனை வழங்கும் படி தீர்ப்பளிக்கப்பட்டது.

இதையடுத்து பந்தாக் நகரில் மசூதி அருகே பொது இடத்தில் ஒவ்வொருவருக்கும் தலா 4 முதல் 22 கசையடி கொடுக்கப்பட்டது.

கசையடியைக் காண குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என ஏராளமானோர் திரண்டிருந்தனர். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டையை குழந்தைகள் பார்த்தனர்.

இந்தோனேசியாவில் பொது இடங்களில் எல்லை மீறுவோரைக் கைது செய்ய ரிலீஜியஸ் போலீஸ் என்ற பெயரில் தனிப்படை இயங்கி வருகிறது.

தண்டனை வழங்கிய அதிகாரி கூறுகையில் இக்கட்டான சூழலில்தான் இத்தகைய தண்டனை வழங்கப்பட்டது. வருங்காலத்தில் இது போன்ற குற்றங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதற்காகவே இது போன்ற தண்டனை என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்