346 பேரின் உயிரை பறித்த இரண்டு பயங்கர விமான விபத்துக்கள்! அதற்கான உண்மை காரணம் வெளியானது

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

இரண்டு பெரிய விபத்துக்களை ஏற்படுத்திய போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களின் மூக்குப் பகுதியில் உள்ள சென்சார் பிரச்சனை தான் விபத்துக்களுக்குக் காரணமாக அமைந்திருக்கக் கூடும் என விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

போயிங் 737 மேக்ஸ் ரக விமானத்தின் மூக்குப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சென்சாரானது நேரான கோணத்தில் இயங்கினாலும், செங்குத்தாக இயங்குவது போல் தவறாகக் காண்பித்ததால் விமானங்கள் தலைகீழாக கீழ்நோக்கி பாய்ந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைக் கட்டுப்படுத்த முடியாததால் இந்தோனேசியா, எத்தியோபியாவில் அந்த ரக விமானங்கள் விபத்துக்குள்ளானது.

இந்தோனேசியா விமான விபத்தில் 189 பேரும், எத்தியோபியா விமான விபத்தில் 157 பேரும் உயிரிழந்தனர்.

இந்தோனேசிய லயன் ஏர் விபத்துக்கு முன்னதாக பாலி-யில் இருந்து ஜகார்டாவுக்கு இயக்கப்பட்ட அதே ரக விமானத்தில், விடுமுறையின்போது எதேச்சையாக மூன்றாவது விமானி பயணிக்க நேர்ந்ததாகவும், அப்போது இதேபோன்று விமானம் தலைகீழாகக் கீழ்நோக்கி பாய்ந்தபோது, அவர் நோஸ் டைவிங் மோட்டாரின் இயக்கத்தை நிறுத்தி விபத்தில் இருந்து காத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இத்தகைய பிரச்சனையை விமானிகளுக்கு முன்பே தெரிவிக்காதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது மேலும், அந்த விமானத்துக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுவதால் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்