சீனாவில் வெடித்து சிதறிய இரசாயன தொழிற்சாலை: அதிரவைக்கும் வீடியோ காட்சி! 6 பேர் பலி.. 30 பேர் படுகாயம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

சீனாவில் இரசாயன தொழிற்சாலை வெடித்து சிதறியதில் 6 பேர் பலியானதோடு, 30 பேர் படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள இரசாயன தொழிற்சாலையில் உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணியளவில் திடீரென வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் 25 கிமீ தூரம் வரை உள்ள வீடுகளில் 2.2 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதோடு மட்டுமின்றி ஆலைக்கு அருகாமையில் உள்ள பள்ளி மற்றும் தொழிசாலைகளின் கண்ணாடிகள் வெடித்து சிதறியுள்ளன.

ஆலையின் மேல் தளத்தில் வேலை செய்தவர்களில் தற்போது வரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 30 பேர் படுகாயமடைந்துளளதாகவும் முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில் படுகாயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

தீயை அணைக்கும் முயற்சியில் 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்