எத்தியோப்பிய விமான விபத்து தொடர்பில் இதுவரை வெளிவராத தகவல்: பகீர் கிளப்பும் முக்கிய காரணம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சர்வதேச அளவில் நடுக்கத்தை ஏற்படுத்திய எத்தியோப்பிய விமான விபத்திற்கு, குறிப்பிட்ட விமான நிறுவனங்களின் அக்கறை இன்மையே காரணம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

போயிங் நிறுவனத்தின் மாக்ஸ் ரக விமானங்கள் இரண்டு விபத்துக்குள்ளானதில், முக்கிய பங்கு அந்த நிறுவனங்கள் மேற்கொண்ட முடிவுகளே காரணம் என நிபுணர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

பொதுவாக குறைந்த கட்டணங்களில் இயக்கப்படும் விமான நிறுவனங்கள், தங்களின் விமானங்களில் போதிய பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது முன்வைக்கப்படுகிறது.

மேலும், விமானங்களில் அதிக அளவு பாதுகாப்பு அம்சங்கள் உட்படுத்துவதால் அதன் விலையிலும் மாற்றம் வரும்.

இதை கருத்தில் கொண்டு விமானங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த சிறப்பு வசதிகளுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதுடன், இதனால் பெருந்தொகை சம்பாதிக்கின்றனர்.

பொதுவாக போயிங் நிறுவனத்தின் மாக்ஸ் 8 ரக விமானங்களில் இந்த சிறப்பு வசதிகளுக்கு 800,000 டொலரில் இருந்து 2 மில்லியன் டொலர் வரை வசூலித்து வருகின்றனர்.

போயிங் நிறுவனம் ஒவ்வொரு பிரத்யேக வசதிக்கும் தனித்தனி கட்டணம் வசூலிக்கின்றது. இதனால் பெரும்பாலான குறைந்த கட்டணத்தில் சேவையாற்றும் விமான நிறுவனங்கள் இந்த சிறப்பு வசதிகளுக்காக அதிக கட்டணம் செலுத்த தயங்குவதாகவும் தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி போயிங் நிறுவனம் மற்றும் அதன் வாடிக்கையாளர்கள் இதுபோன்ற காரணங்களை பொதுமக்கள் பார்வைக்கும் கொண்டு செல்வதில்லை.

மட்டுமின்றி, மாக்ஸ் 8 ரக விமானங்களில் உள்ளடக்கியுள்ள பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பில் போயிங் நிறுவனம் முழு பட்டியலை வெளியிடவும் மறுத்துள்ளது.

2003 ஆம் ஆண்டு வெளியாக தகவலின் அடிப்படையில், பிரேசில் விமான நிறுவனமான Gol Airlines தங்களது விமானத்தில் ஆக்ஸிஜன் மாஸ்குகளுக்காக மட்டும் போயிங் நிறுவனத்திற்கு 6,700 டொலர் செலுத்தியுள்ளது.

மேலும் மேம்பட்ட வானிலை ரேடார் கட்டுப்பாட்டு அமைப்பு ஒன்றை நிறுவுவதற்காக 11,900 டொலர் செலவிட்டுள்ளது.

அமெரிக்க விமான சேவை நிறுவனம் ஒன்று போயிங் நிறுவனத்திடம் இருந்து வாங்கிய 100 விமானங்களுக்கும் மேம்பட்ட பாதுகாப்பு வசதிகளை உட்படுத்த அதிக கட்டணம் செலுத்தியுள்ளது.

மட்டுமின்றி Southwest Airlines நிறுவனம் 280 விமானங்களுக்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிலையில், மேம்பட்ட வசதிகளுக்காக அதிக கட்டணம் செலுத்தியுள்ளது.

ஆனால் United Airlines நிறுவனம் தாங்கள் வாங்கவிருக்கும் 137 விமானங்களுக்கு போயிங் நிறுவனத்தின் குறிப்பிட்ட வசதியை நிராகரித்துள்ளதுடன், அதற்கு பதிலாக வேறு வசதியை தாங்களே உட்படுத்துவதாக கூறியுள்ளது.

கடந்த மார்ச் 10 ஆம் திகதி விபத்துக்குள்ளான எத்தியோப்பிய விமானத்திலும், இதற்கு முன்னர் விபத்துக்குள்ளான Lion Air விமானத்திலும் மேம்படுத்தப்பட்ட வசதிகள் இல்லை என்பதே விபத்துக்கு முக்கிய காரணம் எனவும்,

குறித்த விமான நிறுவனங்கள் பயணிகளின் பாதுகாப்பில் அக்கறை காட்டாததே இதுபோன்ற விபத்து ஏற்பட காரணம் எனவும் நிபுணர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்