பிறந்த குழந்தையைப் பார்த்து புன்னகைத்த தாய்! அடுத்த கணம் நிகழ்ந்த கோரம்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

வலிக்க வலிக்க பெற்ற குழந்தையைப் பார்த்து புன்னகைத்த அந்த தாய்க்கு, அப்புறம் அந்த குழந்தையை பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை, காரணம் ஒரு அனுபவமில்லாத மருத்துவர்!

ரஷ்யாவைச் சேர்ந்த Alisa Tepikina (22), ஒரு அழகிய பெண் குழந்தையைப் பெற்றெடுத்ததும், அவளது முகத்துக்கருகே அந்த குழந்தையைக் காட்டினார்கள் தாதிகள்.

பின்னர் அவரது தொப்புள் கொடி இயற்கையாக விழாததால் அவசரமாக ஒரு பெண் மகப்பேறு மருத்துவர் வரவழைக்கப்பட்டார்.

அந்த மருத்துவர் அப்போதுதான் தனது மகப்பேறு மருத்துவக் கல்வியை முடித்திருந்தார்.

அந்த மருத்துவர், தொப்புள் கொடியைப் பிடித்து பலமாக இழுக்க, தொப்புள் கொடி பிய்ந்து வந்ததோடு, கர்ப்பப்பையின் உள் பகுதி வெளிப்புறமாக திரும்பி விட்டிருக்கிறது.

ஏற்கனவே பிரசவித்த வலி அடங்காத Alisa, மேலும் வலியால் துடித்து கோமா நிலைக்கு சென்றிருக்கிறார்.

பின்னர் மாரடைப்பும் சேர்ந்து கொள்ள, Alisa பின்னர் கண் விழிக்கவே இல்லை. தனது மகளை ஒரு முறை பார்த்து சிரித்த Alisa, மீண்டும் அவளை பார்க்கவேயில்லை, அவரது மகளும் அப்புறம் அம்மாவைப் பார்க்கவேயில்லை.

இதற்கிடையில் இறந்துபோன Alisaவின் அருகில் அவரது கணவனை உட்கார வைத்து, அவரது நிலை மோசமாக இருப்பதாக வேறு பொய் சொல்லியிருக்கிறார்கள் மருத்துவமனை நிர்வாகத்தார்.

தற்போது அந்த மகப்பேறு மருத்துவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு அவர் மீது குற்றவியல் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்