நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச் சூடு! இறுதிச்சடங்கில் நடந்த நெகிழ்ச்சி..வைரலாகும் புகைப்படங்கள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து இறுதி ஊர்வலத்தில் முஸ்லீம் அல்லாதவர்கள் கலந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்தில் இரண்டு மசூதிகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த Brenton Tarrant என்ற நபர் நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூடு காரணமாக 50 பேர் பரிதாபமாக இறந்தனர்.

27 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 5 பேர் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டின் மூலம் நியூசிலாந்து மக்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் உள்ளனர்.

பலர் தங்களின் சகோதரன், சகோதரி, தாய், தந்தை போன்றோரை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று அதாவது வெள்ளிக் கிழமை தாக்குதல் நடத்தப்பட்ட Al Noor மசூதிக்கு வெளியே சுமார் 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்துள்ளனர்.

இதில் 15,000 பேர் முஸ்லீம் அல்லாதவர்கள் என்றும் அவர்களும் இதில் வந்து கலந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இந்த பிரார்த்தனையில் கலந்து கொண்ட நபர் ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் நியூசிலாந்து ஒரு ஒற்றுமையான நாடு என்பதற்கு இது போதும், மற்ற நாடுகளுக்கு இது ஒரு அழகான உதாரணம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த 26 பேரின் உடல் Memorial Park-ல் அடக்கம் செய்யப்பட்டது. இதற்காக இறுதிச்சடங்கின் போது முஸ்லீம் அல்லாதோர் பலர் கலந்து கொண்டதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம்தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers