நியூசிலாந்து இசை விழாவில் பரபரப்பு: சந்தேகத்துக்குரிய நபர் ஒருவரால் 6000 பேர் பாதிப்பு

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

நியூசிலாந்து இசை விழாவிற்காக மக்கள் கூடியிருந்த நிலையில், சந்தேகத்துக்குரிய ஒரு நபரால், நிகழ்ச்சியில் பங்குபெற வந்த 6000 பேர் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நியூசிலாந்தில் Homegrown இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இன்று நியூசிலாந்தின் தலைநகரான வெல்லிங்டனில் இந்த இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சமீபத்தில்தான் நியூசிலாந்து கோர சம்பவம் ஒன்றை சந்தித்திருந்த நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மக்கள் கடுமையான சோதனைகளுக்குட்படுத்தப்பட்டனர். இந்நிலையில், ஒரு நபர் மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, பொலிசார் அவரை பிடித்து சோதனையிட்டனர்.


உடனடியாக அங்கு வந்திருந்த 6000 பேரும் பாதுகாப்பு கருதி நிகழ்ச்சி நடைபெற இருந்த இடத்திலிருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பிடிபட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்ட பொலிசார், பின்னர், பிரச்சினை எதுவும் இல்லை என்பது தெரியவந்ததையடுத்து மீண்டும் மக்களை அனுமதிக்கலாம் என முடிவு செய்துள்ளனர்.

இசை நிகழ்ச்சியின் ஒரு பாகமாக, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்த திட்டமிட்டிருந்த நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers