அப்பா... அப்பா: நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் தந்தையின் கையில் உயிரை விட்ட சிறுவனின் கடைசி நிமிடங்கள்: 2 முறை தலையில் சுட்ட தீவிரவாதி

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

கடந்த 15 ஆம் திகதி நியூசிலாந்து மசூதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இறந்துபோன 3 வயது சிறுவனின் கடைசி நிமிடங்கள் குறித்து அவரது குடும்பத்தார் கவலையோடு பகிர்ந்துள்ளனர்.

Al Noor மசூதியில் சம்பவம் நடைபெற்ற போது 3 வயது சிறுவன் Mucaad தனது தந்தையின் மடியில் அமர்ந்திருந்துள்ளான். துப்பாக்கியால் தீவிரவாதி Brenton Tarrant சுடுவதற்கு முன்னர் தான் , தனது தந்தையின் கன்னத்தில் முத்தமிட்டுள்ளார்.

முத்தமிட்ட சிறிது நேரத்தில் தீவிரவாதி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில், Mucaad தனது மடியில் சரிந்துள்ளான். தனது மகன் இறந்துவிட்டான் என தந்தை நினைத்த நேரத்தில், திடீரென அப்பா அப்பா என Mucaad அழைத்துள்ளான்.

அதுவே, அவனது கடைசி அழைப்பாக இருந்துள்ளது. இச்சிறுவனின் சத்தத்தை கேட்ட தீவிரவாதி மீண்டும் தலையில் சுட்டதில் தனது தந்தையின் கையில் உயிரை விட்டுள்ளான்.

சகோதரி Luul Ibrahim கூறியதாவது, முதல் முறை துப்பாக்கியால் சுட்டபோது எனது தம்பி உயிருடன் இருந்தான், ஆனால் தீவிரவாதி மீண்டும் எனது தம்பியின் தலையில் சுட்டுள்ளான். எனது தந்தைக்கு முத்தமிட்டது, அவரது கையில் எனது தம்பி உயிரை விட்டதை மறக்கமுடியவில்லை, கையில் எனது தம்பியை சுமந்துவருகையில் மீண்டும் அவன் எழுந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் வந்தார், ஆனால் அது பொய்த்துவிட்டது என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers