நடுக்கடலில் தத்தளித்த கப்பல்... துரிதமாக செயல்பட்ட மீட்பு குழு: பகீர் அனுபவத்தை பகிர்ந்த பயணிகள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

1,400 பயணிகளுடன் நடுக்கடலில் தத்தளித்த நார்வே நாட்டு சொகுசுக் கப்பலான வைகிங் ஸ்கை கடும் போராட்டத்திற்கு பின்னர் கரை சேர்ந்துள்ளது.

புயலுக்கு நடுவே இயந்திரக் கோளாறும் ஏற்படவே துரித நடவடிக்கையால் பெரும் விபத்தில் இருந்து நூலிழையில் தப்பியுள்ளது வைகிங் ஸ்கை கப்பல்.

நார்வே கடற்பகுதியில் பயணித்த குறித்த கப்பலானது புயலில் சிக்கிய நிலையில் சனியன்று மீட்பு படையினருக்கு அவசர தகவல் அனுப்பியது.

இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட மீட்பு குழுவினர் அந்த கப்பலில் இருந்து 479 பயணிகளை சாகசிகமாக மீட்டனர். பெரும்பாலும் முதுயவர்கள் என்பதாலும், கொந்தளிக்கும் கடலில் கப்பல் சிக்குண்டு இருப்பதாலும், மீட்பு நடவடிக்கை கடுமையாக இருந்தது என கூறப்படுகிறது.

மொத்த 1373 பயணிகளில் மேலும் 900 பயணிகள் கப்பலில் சிக்கித் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஞாயிறு பகல் நார்வேயின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள Molde துறைமுகத்தில் அந்த கப்பலை கரை சேர்த்துள்ளனர்.

கடல் கொந்தளிப்பில் சிக்கிய கப்பலானது கரைக்கும் 100 மீற்றர் தொலைவில் இருந்தபோதே இயந்திர கோளாறு தெரியவந்ததாகவும்,

பாறை கூட்டம் மிகுந்த அந்த பகுதி வழியாக கப்பல் தரைதட்டும் நிலை ஏற்பட்டிருந்தால் அது மிகப்பெரிய விபத்தை எதிர்கொண்டிருக்கும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 20 பயணிகளை தற்போது மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

பலரும் அதிர்ச்சியில் உள்ளதாகவும், கரை சேர்ந்த பின்னர் அவர்களுக்கான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படும் என தலைமை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers