பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மகள்... பரிதவித்த தாயார்: இறுதில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
158Shares

ஜிம்பாப்வேவில் உள்ள சிமனிமணி கிராமத்தில் பெருவெள்ளத்தில் சிக்கிய தமது பிள்ளைகளை காப்பாற்றும் முயற்சியில், தாயார் ஒருவர் தனது மகளை தவறவிட்டுள்ளார்.

ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றில் இடாய் புயல் காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. உயிருக்கும் உடைமைக்கும் இடையே அங்குள்ள மக்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் ஜிம்பாப்வே நாட்டில் பெருவெள்ளத்தில் அகப்பட்டு அடித்துச் செல்லப்பட்ட சிறுமி ஒருவர், மரத்தில் சிக்கி அதிசயமாக உயிருடன் தப்பிய சம்பவம் அவரது தாயாரை நெகிழ வைத்துள்ளது.

சம்பவத்தன்று லிஸ்பா என்பவர் பெருவெள்ளத்தில் சிக்கிய தமது பிள்ளைகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அப்போது அவரது மூத்த மகள் வெள்ளத்தில் சிக்குண்டு காப்பாற்ற அலறியுள்ளார். லிஸ்பா காப்பாற்ற முயற்சிக்கும் முன்னர் கண்ணிமைக்கும் நொடியில் அவர் மாயமாகியுள்ளார்.

பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் தமது மகளை காப்பாற்ற முயன்றால் எஞ்சிய தமது மூன்று பிள்ளைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவது உறுதி என கருதிய லிஸ்பா, கண்ணீருடன் வெறித்துப் பார்த்தப்படி நின்றுள்ளார்.

பின்னர் மீட்பு குழுவினரால் பிஸ்பாவும் அவரது பிள்ளைகளும் காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பரிதவிப்புடன் தமது மகளை தேடிய லிஸ்பாவின் கண்ணில், அவரது மகள் சிக்கியுள்ளார்.

படுகாயங்களுடன் மரம் ஒன்றில் சிக்கியிருந்த அவரை லிஸ்பாவும், மீட்பு குழுவினரும் காப்பாற்றியுள்ளனர்.

ஜிம்பாப்வே நாட்டில் மட்டும் இதுவரை இடாய் புயலுக்கு 200 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பலர் மாயமாகியுள்ளதால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்