விபத்தை காண வந்த கூட்டத்தின் மீது மோதிய லொறி! 18 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

கவுதமாலா நாட்டில் மக்கள் நிறைந்த இருண்ட நெடுஞ்சாலையில் கட்டுக்கடங்காமல் வந்த லொறி மோதியதால், 18 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கவுதமாலாவின் சோலோலா மாகாணத்தில் நெடுஞ்சாலையில் நபர் ஒருவர் விபத்தில் பலியாகியானர். அதனை காண ஏராளமானோர் அங்கு கூடினர்.

அப்போது அவ்வழியாக கனரக சரக்கு லொறி ஒன்று மிக வேகமாக வந்து கூட்டத்தினர் மீது மோதியது. நெடுஞ்சாலையில் எவ்வித விளக்கொளியும் இல்லாமல் இருட்டாக இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் 30 பேர் பலியானதாக முதலில் கூறப்பட்டது. இந்நிலையில், இந்த கோர விபத்தில் 18 பேர் பலியானதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோலோலா மாகாணத்தைச் சேர்ந்த நஹூலா நகராட்சி தீயணைப்புத்துறை செய்தித் தொடர்பாளர் செசிலியோ சாக்காஜ் தெரிவித்தத்தை மேற்கோள் காட்டி, பாக்ஸ்நியூஸ் செய்தி நிறுவனம் இந்த விபரத்தை வெளியிட்டுள்ளது.

GETTY IMAGES

முன்னதாக, இந்த விபத்தில் 30 பேர் பலியானதாகவும், அதற்கு தாம் வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும் அந்நாட்டின் ஜனாதிபதி ஜிம்மி மொரால்ஸ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இத்துயரச் சம்பவத்தில் பலியானோருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக தேவைப்படும் அனைத்து உதவிகளும் அரசு செய்யும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...