வெளிநாட்டில் தீப்பிடித்து எரிந்த 22 மாடி கட்டிடம்... பரிதாபமாக உயிரிழந்த இலங்கையர்... இன்னொரு இலங்கையரின் கதி என்ன?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

வங்கதேசத்தில் அலுவலகக் கட்டிடம் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்னொரு இலங்கையர் கீழே குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

வங்கதேச தலைநகரம் டாக்காவில் உள்ள FR tower என்ற அலுவலக கட்டிடம் ஒன்றின் 9-வது மற்றும் 10-வது தளத்தில் நேற்று தீவிபத்து ஏற்பட்டது. இதில் 25 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவத்தில் 74 பேர் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

100-க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

உயிரிழந்த 25 பேரில் இலங்கையை சேர்ந்த ஒருவரும் அடங்குவார் என டாக்கா தீயணைப்பு துறை செய்தி தொடர்பாளர் ஷாஜகான் சிக்தர் கூறியுள்ளார்.

அவரின் பெயர் நிராஸ் சந்திரா என தெரியவந்துள்ளது, தீயிலிருந்து தப்பிக்க முயன்ற போது கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து நிராஸ் இறந்தார் என தெரியவந்துள்ளது.

இந்த விபத்தின் போது 10வது மாடியில் இலங்கையை சேர்ந்த இண்டிகா மரசின்ஹே (46) என்பவர் இருந்துள்ளார்.

10வது மாடியில் உள்ள ஒரு நிறுவனத்தில் இண்டிகா மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் தீப்பிடித்ததன் காரணமாக அதிகளவில் புகை வெளியேறியதால் இண்டிகா சுவாசிக்க முடியாமல் திணறினார்.

இதையடுத்து உயிரை காப்பாற்றி கொள்ள பைப்பை பிடித்து கொண்டு அவர் கீழே இறங்கினார்.

2வது மாடி அருகில் வந்த போது அதிகளவில் வெளியான புகையிலிருந்து தப்பிக்க இண்டிகா அங்கிருந்து கீழே குதித்தார்.

இதில் காயமடைந்த அவர் உடனடியாக டாக்கா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவர் உடல் நிலை குறித்து மருத்துவர் அலாவுதின் கூறுகையில், இண்டிகாவின் வலது கையில் சிறிய அளவில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.

அவருக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை, கட்டிடத்தின் உள்ளே இருக்கும் போது அதிகளவு புகை வெளியேறியதால் சுவாச பிரச்சனையால் பாதிக்கப்பட்டார் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்