காற்றில் பறந்து அப்படியே மேல் நோக்கி சென்ற மனிதர்... அடுத்து நடந்தது என்ன? வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

துருக்கியில் காற்றில் நிற்குடையுடன் நபர் ஒருவர் மேலே பறந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

துருக்கியின் ஒஸ்மானியே பகுதியில் காற்று மிக வேகமாக வீசியது. அப்போது அங்கிருந்த நிழற்குடை காற்றில் பறக்கும் நிலையில் இருந்தது.

நிழற்குடையை தடுத்து நிறுத்த மூன்று பேர் முயன்றனர், அப்போது அதில் ஒருவரான சாதிக் கோகதள்ளி என்பவர் நிழற்குடையின் மீது கால்களை வைத்த நிலையில் குடையோடு மேலே பறந்தார்.

அவருக்கு அதிர்ஷ்டவசமாக காயங்கள் ஏதும் ஏற்படாத நிலையில் சில நிமிடங்களில் பத்திரமாக தரையிறங்கினார்.

இது குறித்து சாதிக் கூறுகையில், ஹொட்டல் வெளியில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென காற்று பலமாக வீசியது. இதனையடுத்து அருகில் இருந்த நிழற்குடை பறக்க தொடங்கியது, அதனை நான் கட்டுப்படுத்த முயன்ற போது காற்று அந்த குடையுடன் சேர்த்து என்னையும் மேலே இழுத்து சென்றது.

சுமார் 2 அல்லது 3 மீட்டர் உயரம் வரை பறந்தேன், காயமின்றி தப்பித்து விட்டேன். என்னுடன் கீழே இருந்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டது என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்