உக்ரைனில் ஆட்சியை கைப்பற்றும் கொமடி நடிகர்!

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

உக்ரைன் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் கொமடி நடிகர் ஒருவர் முன்னிலை பெற்றுள்ளதால், அந்நாட்டு ஜனாதிபதியாக அவர் பதவியேற்பது உறுதியாகியுள்ளது.

உக்ரைன் ஜனாதிபதி தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இதன் முதல்கட்ட முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் அரசியல் அனுபவம் ஏதும் இல்லாத 41 வயது கொமடி நடிகர் வோலோடிமிர் ஸெலன்ஸ்கி(Volodymyr Zelenskiy)30 சதவீத வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அவருக்கு அடுத்து தற்போதைய ஜனாதிபதி பெட்ரோ போரோஷென்கோ 17 சதவீத வாக்குகள் பெற்றுள்ளார்.

இதையடுத்து 2ஆம் கட்ட முடிவுகள் வெளியாகும்போது அதிலும் ஸெலன்ஸ்கி முன்னிலை வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அவர் மொத்தம் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றால், உக்ரைன் ஜனாதிபதியாக பொறுப்பேற்பார்.

இல்லையெனில், முதல் 2 இடங்களைப் பிடிக்கும் தலைவர்கள் இடையே வரும் 21 ஆம் திகதி மீண்டும் தேர்தல் நடத்தப்படும்.

உக்ரைன் ஜனாதிபதியாக இருந்த ரஷ்ய ஆதரவாளரான விக்டர் யானுகோவிச், உள்நாட்டில் மூண்ட புரட்சியை அடுத்து நாட்டை விட்டு வெளியேறினார்.

இதையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைன் ஜனாதிபதியாக பொரோஷென்கோ பதவியேற்றார். இதனிடையே, உக்ரைனுடன் ஏற்பட்ட மோதல் போக்கை அடுத்து, கிரிமியா பகுதியை ரஷ்யா தங்களுடன் இணைத்து கொண்டது.

மேலும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள், உக்ரைனின் எல்லையோர பகுதியை ஆக்கிரமித்து கொண்டனர். இந்த சூழ்நிலையில், உக்ரைன் ஜனாதிபதி பதவிக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்