$10 மில்லியன் பணத்தை வைத்து விசித்திர செயலில் ஈடுபட்ட மிக பெரிய கோடீஸ்வரர்.... என்ன செய்தார் தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ஆப்பிரிக்காவின் நம்பர் 1 கோடீஸ்வரரான அலிகோ டங்கோட் என்பவர் ஒருமுறை $10 மில்லியன் பணத்தை வங்கியில் இருந்து எடுத்த நிலையில் அதை தான் என்ன செய்தேன் என்பது குறித்து கூறியுள்ளார்.

ஆப்பிரிக்காவின் மிக பெரிய கோடீஸ்வரர் அலிகோ டங்கோட். இவருடைய நிகர மதிப்பு $10.6 பில்லியன் ஆகும்.

அலிகோ சமீபத்தில் அளித்த பேட்டியில், நாம் முதன் முதலில் மில்லியன் கணக்கில் பணத்தை சம்பாதிக்கும் போது அது நமக்கு பெரிய விடயமாக தெரியும்.

பின்னர் அதிகளவில் பணம் சேரும் போது பழகிவிடும்.

அப்படி தான் முன்னர் நான் வங்கியிலிருந்து $10 மில்லியன் பணத்தை எடுத்து என் காரின் கீழ் பக்கத்தில் வைத்து கொண்டேன்.

பின்னர் அந்த பணத்தை என் வீட்டின் அறையில் வைத்து நன்றாக ரசித்தேன், அது பணம் தான், காகிதம் கிடையாது, என்னிடம் பணம் உள்ளது என்பதை உணர்ந்தேன்.

பின்னர் அடுத்தநாள் அந்த பணத்தை வங்கிக்கு மீண்டும் கொண்டு சென்றுவிட்டேன் என கூறினார்.

இன்று நம்பர் 1 கோடீஸ்வரராக உயர்ந்துவிட்டாலும், ஆரம்பத்தில் அதிகளவு பணத்தை முதல் தடவை பார்த்த போது தான் எப்படி நடந்து கொண்டேன் என்பதை விளக்கும் விதத்திலேயே அலிகோ இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்