தவறுதலாக கெமராவை ஆன் செய்து விட்டுச் சென்ற கணவன்: மனைவியின் துரோகத்தை காட்டிக் கொடுத்த கெமரா!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

தான் வாங்கிய கெமரா வேலை செய்யவில்லை என்று எண்ணி தவறுதலாக அதை ஆன் செய்து விட்டுச் சென்ற கணவன், மீண்டும் அதை இயக்கிப்பார்க்கும்போது தன் நெருங்கிய நண்பனுடன் தன் மனைவி தனக்கு துரோகம் செய்வதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

சீனாவைச் சேர்ந்த யாங்கிற்கு ஏற்கனவே தன் மனைவி மீது சந்தேகம் இருந்த நிலையில், அந்த வீடியோவைக் கண்டதும் அது உறுதியாகவே, அவரை விவாகரத்து செய்துவிட்டார்.

வெளியாகியுள்ள அந்த வீடியோவில், யாங்கின் மனைவி சுயி ஹுவா, யாரோ வந்து கதவைத் தட்ட, திறக்கிறார்.

வீடியோவை காண

உள்ளே வரும் யாங்கின் நண்பரான லியுவிடம் சுயி, என்ன செய்கிறீர்கள் என்று கேட்க, உன்னை மிகவும் மிஸ் பண்ணுகிறேன் என்று அவர் கூற, இருவரும் கட்டியணைத்து முத்தமிட்டுக் கொள்கிறார்கள்.

பின்னர் சுயியின் உடையை கழற்றும் லியு அவரது மார்பகங்களில் முத்தமிடுகிறார். எடிட் செய்யப்பட்ட அந்த வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கும் சுயி, அது ஒரு விபத்து என்கிறார்.

லியு குடித்திருந்ததாகவும், அதனால்தான் அந்த சம்பவம் நடந்தது என்றும் கூறும் அவர், தன்னை வேவு பார்ப்பதற்காக தனது கணவர் வேண்டுமென்றே கெமராவை ஆன் செய்து விட்டுச் சென்றுள்ளார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

அந்த வீடியோவை அரசுக்கு அனுப்பி, அரசுப்பணியாளராக இருந்த லியு குறித்து அரசிடம் யாங் விளக்கம் கேட்க, லியு அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டதாகக்கூறி வேறெந்த கருத்தும் கூற அரசு தரப்பு மறுத்து விட்டது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers