இரவில் தனியாக அழுதபடி நின்றிருந்த புலம்பெயர்ந்த சிறுமி.... உலகை உலுக்கிய அந்த புகைப்படத்துக்கு கிடைத்த கெளரவம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

மெக்சிகோ எல்லையில் பயத்தில் சிறுமி அழுது கொண்டிருப்பது போன்ற புகைப்படம், இந்த ஆண்டுக்கான உலக பத்திரிக்கை புகைப்பட விருதை வென்றுள்ளது.

மெக்சிகோ நாட்டிலிருந்து அமெரிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12ம் திகதி சிலர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான சாண்ட்ரா சஞ்சேஸ் என்ற பெண், சிறுமியான தனது மகள் யனீலாவை அங்கேயே விட்டுவிட்டு, மற்ற கைதிகளுடன் எல்லை படையினர் வாகனத்தில் உடன் சென்றார்.

இந்த சம்பவம் இரவில் நடந்த நிலையில் அப்போது தனித்து விடப்பட்ட சிறுமி யனீலா கார் அருகில் நின்று பயத்தில் அழுது கொண்டிருந்தாள்.

இது தொடர்பான புகைப்படம் அப்போது சமூகவலைதளங்களில் வெளியாகி உலகை உலுக்கியது.

அந்த புகைப்படத்தை ஜான் மூர் என்ற புகைப்பட கலைஞர் படம் பிடித்தார்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான உலக பத்திரிக்கை புகைப்பட விருதுக்கான புகைப்படங்களை 4,738 புகைப்பட கலைஞர்கள் சமர்பித்திருந்தனர்.

இதில் புலம்பெயர்ந்த சிறுமி அழுதவாறு இருந்த புகைப்படம் உலக பத்திரிக்கை புகைப்பட விருதினை வென்றுள்ளது.

இது குறித்து ஜான் கூறுகையில், நான் எடுத்த அந்த புகைப்படம் அப்போதே பெரும் கவனத்தை ஈர்த்தது.

என்னுடைய இத்தனை ஆண்டு பணியில் குடியேற்ற பிரச்சனைக்கு மனிதத்தன்மையுடன் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதையே இலக்காக கொண்டுள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்