அரைகுறை ஆடையுடன் நடனமாடிய அழகிக்கு 1 வருடம் சிறைத்தண்டனை!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

எகிப்து நாட்டில் அரைகுறை ஆடையுடன் நடனமாடிய ரஷ்ய பெண்ணுக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த 31 வயதான எக்டேரினா ஆண்ட்ரீவா என்கிற இளம்பெண், உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நடனம் ஆடி வருகிறார்.

இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், எகிப்து நாட்டில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அரைகுறை ஆடையுடன் ஆபாசமாக நடனடமாடியிருக்கிறார்.

இந்த வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலானதை அடுத்து, கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு 7 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு ஜாமீனில் வெளிவந்தார்.

இந்த நிலையில் வழக்கினை விசாரித்த நீதிமன்றம் எக்டேரினா ஆண்ட்ரீவாவிற்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்