திருமணமான இளைஞருடன் ஓட்டம் பிடித்த மனைவி... எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என கூலாக கூறிய கணவன்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ஜிம்பாப்வேயில் மனைவி வேறு நபருடன் ஓடி போன சூழலில், அதனால் தனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது என கணவர் கூறியுள்ளார்.

நிக்சிமலோ என்ற நபருக்கும், தலாமினி என்ற பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் தனது வீட்டருகில் வசிக்கும் திருமணமான இளைஞருடன் தலாமினிக்கு பழக்கம் ஏற்பட்டதையடுத்து அவருடன் சமீபத்தில் தலாமினி ஓடி போயுள்ளார்.

பின்னர் நீதிமன்றத்தை நாடிய தலாமினி, தன்னுடைய கணவர் தன்னை அடித்து கொடுமைபடுத்துவதால் அவருடன் வாழ முடியாது என முடிவெடுத்துவிட்டேன் என தெரிவித்தார்.

இதற்கு பதில் மனு அளித்த நிக்சிமலோ, தலாமினி வேறு நபருடன் பழகியதை கண்டுப்பிடித்ததை தொடர்ந்தே அவரை அடித்தேன்.

ஏற்கனவே திருமணமான நபரை என் மனைவி காதலிப்பது தவறு, ஏனெனில் அந்த நபரின் மனைவியின் வாழ்க்கை இதனால் பாழாகிவிடும்.

அவருடன் என் மனைவி சென்றதால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நீதிபதி கூறுகையில், நிக்சிமலோவும், தலாமினியும் ஒருவரையொருவர் வார்த்தைகளால் திட்டி கொள்ளவோ, சண்டை போட்டு கொள்ளவோ கூடாது.

திருமணத்தின் போது கணவரிடம் இருந்து வாங்கிய பொருட்கள் மற்றும் சொத்துக்களை தலாமினி மீண்டும் அவரிடமே கொடுத்துவிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்