கணவரின் கொடுமை தாங்காமல் வேறு நாட்டுக்கு சென்ற இந்திய பெண்... அங்கு வேறு நபரை திருமணம் செய்து கொண்டதாக தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

இந்தியாவை சேர்ந்த இளம்பெண் கணவரை பிரிந்து பாகிஸ்தானுக்கு சென்ற நிலையில் அங்கு வேறு நபரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகரை சேர்ந்தவர் டினா. இவருக்கு திருமணமாகி கணவருடன் வாழ்ந்து வந்த நிலையில் கணவர், டினாவை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது.

இதனால் வெறுத்து போன டினா, பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார்.

அங்கு சுலேமான் என்ற இளைஞரை அவர் திருமண செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையில் சுலேமான் டினாவை கட்டாயப்படுத்தி தனது வீட்டில் அடைத்து வைத்துள்ளதாகவும், அவரை இந்தியாவுக்கு அழைத்து வர பாகிஸ்தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய வெளியுறவு அலுவலகம் கோரிக்கை வைத்தது.

ஆனால் இஸ்லாமாபாத்தில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளது.


மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்