எனது மகளின் தலையில் குறிவைத்து துப்பாக்கியால் சுட்டான்: 30 நாட்கள் கழித்து நெஞ்சை உருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட தந்தை

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

வாசிம் அல்ஸாதி என்ற தந்தை நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது மகளின் புகைப்படத்தை ஒரு மாதத்திற்கு பின்னர் வெளியிட்டுள்ளார் .

கடந்த மாதம் 15 ஆம் திகதி நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதிகளில் நடத்தப்பபட்ட துப்பாக்கி சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர் , மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில், ஆலின் என்ற 5 வயது சிறுமியின் மூளையில் துப்பாக்கிகுண்டு பாய்ந்து சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள தந்தை வாசிம் அதனுடன் தனது கருத்தையும் பகிர்ந்துள்ளார்.

எனது மகளுக்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், அவளுடைய மூளையின் தற்போதைய செயல்பாடு குறித்து மருத்துவர்கள் கூறவில்லை. பிரெண்டன் என்னை நோக்கி துப்பாக்கில் சுட்டது கூட எனக்கு கோபத்தை ஏற்படுத்தவில்லை, ஆனால் எனது பிஞ்சுக்குழந்தையை சுட்டது வேதனையளிக்கிறது.

எனது மகளின் கையை கோர்த்துக்கொண்டு செல்கையில், பிரெண்டனை துப்பாக்கியுடன் முதலில் பார்த்தவுடன் அவனது ஆடையை வைத்து அவன் ஒரு நியூசிலாந்து இராணுவ வீரர் என நினைத்தேன்.

ஆனால், அவன் எனது மகளின் தலையை குறிவைத்து சுட்டான். அவன் இராணுவ வீரன் என்று நான் உணருவதற்குள் அடுத்த குண்டு எனது மகளின் காலில் பாய்ந்தது. எனது மகளை தள்ளிவிட்டு காப்பாற்ற முயலுகையில் மூன்றவாது குண்டு எனது வயிற்றில் பட்டது.

இந்த தாக்குதலில் இருந்து நான் குணமடைந்துவிட்டேன், ஆனால் எனது மகள் தற்போது வரை சரியாக பேச முடியாமல் இருக்கிறாள். ஒவ்வொரு நாளும் விடியும்போது ஏதும் மாற்றம் வராத என்ற எதிர்பார்ப்போடு இருக்கிறேன்.

இந்த வலி எனக்கு மட்டும் இல்லை, என்னை போன்று பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் உள்ளது. இப்படி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய பிரெண்டன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் அவனுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

இதற்காக , சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து, பிரெண்டனுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என நியூசிலாந்து அரசிடம் தனிப்பட்ட முறையில் கோரிக்க விடுப்பதற்கு முடிவு செய்துள்ளேன் என கூறியுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள தனது மகளின் புகைப்படத்தில் நியூசிலாந்து பிரதமரும் இருக்கிறார். அவர் மருத்துவமனைக்கு சென்று சிறுமி மற்றும் இவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் வழங்கியபோது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers