2 வயது மகளை அடமானம் வைத்து சாப்பிட்ட தந்தை: நெஞ்சை உலுக்கும் சம்பவம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சீனாவில் தந்தை ஒருவர் உணவகத்தில் சாப்பிட்ட தொகைக்காக சொந்த மகளையே அடமானம் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஃபோஷான் பகுதியில் குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சம்பவத்தன்று உணவகம் ஒன்றில் ஒரு கிண்ணம் நூடில்ஸ் உணவு சாப்பிட்டுள்ளார் அந்த நபர். அவருடன் அவரது 2 வயது மகளும் உணவகம் சென்றிருந்தார்.

இந்த நிலையில் உணவுக்கான தொகை 68p என கூறப்பட்டது. ஆனால் அவரிடம் 10p குறைவாக இருந்துள்ளது.

இதனையடுத்து அந்த உணவக நிர்வாகியிடம் பேசிய அந்த நபர், தம்மிடம் போதுமான பணம் இல்லை எனவும், ஆனால் தமது 2 வயது மகளை அடமானம் வைப்பதாகவும்,

அடுத்த நாள் பணத்துடன் வந்து மகளை அழைத்துச் செல்வதாகவும் கூறிவிட்டு, உணவகத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

அவர் வெளியேறிய அடுத்த நொடி அந்த 2 வயது சிறுமி வாய்விட்டு கதறியுள்ளது. இதை எதிர்பார்க்காத உணவக நிர்வாகி, அந்த குழந்தைக்கு சோயா பால் வழங்கியுள்ளார்.

சிறுமியின் தந்தை உணவகத்தை விட்டு வெளியேறி பல மணி நேரம் கடந்தும் பணத்துடன் வந்து சேராதது கண்டு, அவர்கள் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

பொலிசார் வந்து சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர். இந்த நிலையில் பணத்துடன் திரும்பி வந்த அந்த நபர், உணவகத்தில் தமது மகள் இல்லை என அறிந்து கடும் கோபத்தில் அவர்களை திட்டியுள்ளார்.

தாம் தமது மகளை கைவிடவில்லை எனவும், பணத்தை திரட்ட கொஞ்சம் கால தாமதம் ஏற்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பொலிசாரை அணுகிய அவர், நேர்ந்த சம்பவத்தை கூறி, தமது மகளை அழைத்துச் சென்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers