விமானத்தின் இன்ஜினில் திடீரென்று ஏதோ ஒன்றை வீசிய பெண் பயணி..விசாரணையில் அவர் சொன்ன மூட நம்பிக்கையான பதில்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் 66 வயது பெண் பயணி ஒருவர் 6 நாணயங்களை விமானத்தின் இன்ஜினில் வீசிவிட்டு அதற்கு அவர் கூறிய காரணம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் Tianjin ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று Hohhot Baita சர்வதேச விமானநிலையத்தில் இருந்து, சுமார் 100 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்துள்ளது.

அப்போது விமானத்தின் பயணம் செய்யவிருந்த 66 வயது பெண் விமானத்தின் இன்ஜினின் ஏதோ ஒன்றை வீசியுள்ளார்.

அதன் பின் அவரை பிடித்து நடத்தப்பட்ட விசாரணையில் விமானம் நல்ல படியாக பறக்க வேண்டும், எந்த ஒரு விபத்தும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, அவர் 6 உள்ளூர் நாணயங்களை வீசியிருப்பது தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்த அந்த பெண் விமானத்தில் இருந்து இறக்கவிடப்பட்டதாகவும், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இப்படி நடந்து கொண்ட அவருக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த பெண்ணின் பெயர் யாங் என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற படி அவர் யார் எங்கிருந்து வருகிறார் என்பது குறித்து எந்த ஒரு தகவல்களும் இல்லை.

மேலும் இது போன்று நடப்பது இது முதல் முறையல்ல இதே போன்று பயணிகள் சிலர் விமானத்தின் இன்ஜினில் நாணயங்களை தூக்கி வீசியதுண்டு.

இப்படி வீசுவதால் விமானத்திற்கு தான் பிரச்சனை வரும் என்றும் விமானமானது நடுவானில் பறக்கும் போது, இன்ஜின் சுற்றும் போது அந்த நாணயங்கள் இன்ஜினில் சிக்குவதற்கு வாய்ப்பிருக்கிறது. இதனால் விமானத்தின் உள்ளே இருக்கும் பயணிகளுக்கு தான் ஆபத்து என்று பல முறை விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers