வெளிநாட்டில் 2 இந்தியர்களின் தலை துண்டாக்கி மரண தண்டனை! அவர்கள் செய்த குற்றம் என்ன தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

சவுதி அரேபியாவில் கொலைக்குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு இந்தியர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சத்வைந்தர் குமார், ஹர்ஜீத் சிங் ஆகிய இருவருக்கும் இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டதை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

அதாவது கொள்ளையடித்த பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், மற்றொரு இந்தியரான ஆரிஃப் இமாமுதின் என்பவரை சத்வைந்தர் குமார், ஹர்ஜீத் சிங் ஆகிய இருவரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர், இந்த குற்றத்திற்காகவே மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் சவுதி அரேபியாவிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தகவல் அளிக்காமலேயே இருவருக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers