ஒருவரிடமாவது தமிழில் பேசலாம்... அந்த நாளுக்கு பேன்டேஜாக களத்திற்கு செல்வேன்: உலகக்கோப்பை தேர்வு குறித்து தினேஷ் கார்த்திக்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கான இந்திய தொடரில் இடம்பிடித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

அணியில் டோனிக்கு காயம் ஏற்பட்டால் அந்த நாளுக்கு பேன்டேஜாக நான் களத்துக்குச் செல்வேன். அவருடன் நான் பயணிக்கையில் சிறிய முதலுதவி பெட்டி போன்றுதான்.

மாறாக எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் என்னால் 4 -வது இடத்தில் இறங்கியும் ஆட முடியும். அல்லது கடைசிக் கட்டத்தில் ஒரு ஃபினிஷராகவும் செயல்படமுடியும் என கூறியுள்ளார்.

மேலும் உலகக்கோப்பை அணியில் மற்றொரு தமிழக வீரரான விஜய் ஷங்கர் தேர்வானது குறித்து பேசிய அவர், குறைந்தபட்சம் ஒருவரிடமாவது தமிழில் பேச முடியும் என்பதில் மகிழ்ச்சி. அதேபோன்று தோசை இட்லி என இணைந்து சாப்பிட வசதியாக இருக்கும் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers