வெளிநாட்டில் இந்தியருக்கு தலை துண்டாக்கி மரண தண்டனை... அவர் உயிருடன் திரும்புவார் என காத்திருக்கும் மனைவி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்ற இரண்டு இந்தியர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில் அதில் ஒருவரின் மனைவி இந்திய வெளியுறவுத்துறைக்கு அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சத்வைந்தர் குமார், ஹர்ஜீத் சிங் ஆகிய இருவருக்கும் சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இரண்டு நாட்களுக்கு முன்னர் உறுதிப்படுத்தியது.

மேலும் சவுதியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தகவல் அளிக்காமலேயே இருவருக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதாவது கொள்ளையடித்த பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், மற்றொரு இந்தியரான ஆரிஃப் இமாமுதின் என்பவரை சத்வைந்தர் குமார், ஹர்ஜீத் சிங் ஆகிய இருவரும் சேர்ந்து கொலை செய்ததற்கு இந்த தண்டனை வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் சத்வைந்தரின் மனைவி சீமா தனது கணவரை காப்பாற்ற பல ஆண்டுகளாக முயன்றதாக கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், 2013-ல் சவுதிக்கு என் கணவர் கார் ஓட்டுனராக பணிபுரிய சென்றார்.

2016-ல் கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக என் கணவரை கைது செய்தனர்.

இது தொடர்பாக பிஜேபி தலைவர் அவினாஸிடம் உதவி கோரினேன், ஆனால் எந்த உதவியும் கிடைக்கவில்லை.

வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு இது தொடர்பாக மின்னஞ்சல் அனுப்பினேன்.

மூன்று வருடங்களாக இது தொடர்பாக போராடியும் வெளியுறவு துறை அமைச்சகத்தின் செயல்பாடுகள் எனக்கு திருப்தி அளிக்கவில்லை.

எங்களுக்காக தான் என் கணவர் சவுதிக்கு சென்றார், அவர் மீது போடப்பட்ட வழக்கை என்னால் நம்பமுடியவில்லை.

என் 13 வயது மகளை வைத்து கொண்டு தவித்து வருகிறேன், அவளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதே என் எண்ணம்.

என் கணவர் சத்வைந்தர் கொல்லப்பட்டார் என்பதற்கான ஆதாரங்களை எனக்கு காட்டுங்கள், அப்போது இந்திய அரசு சொல்வதை நம்புகிறேன்.

அவர் இந்த வழக்கில் பொய்யாக சம்மந்தப்பட்டிருப்பார் என நம்புகிறேன். என் கடைசி மூச்சு உள்ள வரை என் கணவருக்காக காத்திருப்பேன்.

அவர் மீண்டும் வந்தால் நான் அதிர்ஷ்டம் செய்தவள் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers