கதறி அழுத குழந்தை.. மனைவியை பழிவாங்குவதற்கு கணவன் அனுப்பிய அதிர்ச்சி புகைப்படம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சீனாவில் விவாகரத்து பெற்று மனைவிக்கு கணவன் அனுப்பிய புகைப்படம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் Caitang பகுதியில் இருக்கும் Chao'an மாவட்டத்தைச் சேர்ந்த தந்தை ஒருவர், விவாகரத்து பெற்ற மனைவியை பழிவாங்க நினைத்துள்ளார்.

இதனால் தன்னுடைய வீட்டில் வளர்ந்து வந்த 20 மாத குழந்தையை நாய் அடைத்து வைக்க பயன்படுத்தப்படும், இரும்பு கூண்டிலில் அடைத்து வைத்து, அதை புகைப்படமாக எடுத்து மனைவிக்கு அனுப்பியுள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரின் மனைவி உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த ஆண்டு தான் இந்த தம்பதிக்கு விவகாரத்து ஆகியுள்ளது. இருப்பினும் மனைவியின் மீது வெறுப்பில், குழந்தையை கூண்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளார்.

இதில் அந்த குழந்தை கதறி அழுகிறது. அதில் கூட மனம் இரங்காமல் அப்படியே புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளார். அதுமட்டுமின்றி குழந்தையின் கால்களில் வெட்டுக்காயங்கள் இருக்கின்ற புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

தற்போது இப்புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் 3800 பகிர்வும் 15,600 கமெண்ட்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers