மக்கள் கூட்டத்தில் அதிவேகத்தில் நுழைந்த கார்.. குழந்தையுடன் பலியான இளம் தாய்!

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

ஜப்பானில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த கார் சக்கரத்தில் சிக்கி, 20 வயது பெண் மற்றும் அவரது குழந்தை இருவரும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டோக்கியோவில் உள்ள இகேபுகுரோ மாவட்டத்தில் சுரங்கப்பாதை ரெயில் நிலையம் ஒன்று உள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு தினமும் சுமார் 50 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். இதனால் அந்த சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும்.

இந்நிலையில், இந்த சாலையில் நேற்றைய தினம் மதியம் 12.30 மணியளவில் மக்கள் கூட்டம் நிறைந்துள்ளது. அப்போது அதிவேகத்தில் வந்த கார் ஒன்று திடீரென மக்கள் கூட்டத்திற்குள் புகுந்து விபத்தை ஏற்படுத்தியது.

இதில் மக்கள் பலர் தூக்கி வீசப்பட்டனர். அத்துடன் சிலர் கார் சக்கரத்தில் நசுங்கினர். எனினும் கார் நிற்காமல் தறிகெட்டு ஓடியது. பின் குப்பை லொறி ஒன்றின் மீது மோதி அந்த கார் நின்றது.

இந்த கோர விபத்தில் பலர் படுகாயமடைந்த நிலையில், 20 வயதான பெண் ஒருவர் தனது இரண்டு வயது பெண் குழந்தையுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

மேலும் இதுவரை இந்த விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்