இலங்கையில் வதந்திகள் பரவாமல் தடுக்க சமூகவலைதளங்களை முடக்கிய அரசு

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

இலங்கையில் கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம், சங்கிரில்லா நட்சத்திர ஹொட்டலின் மூன்றாவது மாடி, சின்னமன் கிரான்ட் , கிங்ஸ்பெரி நட்சத்திர ஹொட்டல் தெஹிவளை மற்றும் தெமட்டைகொடை ஆகிய 8 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

இன்றைய குண்டுவெடிப்புகளில் இதுவரை, மூன்று காவல் அதிகாரிகள் உள்பட 207 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 450 பேர் காயமடைந்துள்ளனர்.

தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து வதந்திகள் பரவாமல் தடுக்க இலங்கையில் பேஸ்புக், வாட்ஸ் ஆப், வைபர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை இலங்கை அரசு முடக்கி உள்ளது.

தொடர் குண்டுவெடிப்பை அடுத்து இலங்கையில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்