இலங்கையில் நடந்த கொடிய வன்முறை.... பலியானவர்களை இறைவனிடம் ஒப்படைக்கிறேன்: போப் ஆண்டவர்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் ஒரு கொடிய வன்முறை என போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு போப் ஆண்டவர் பிரான்சிஸ், புனித பீட்டர் சதுக்கத்தில் ஆசி வழங்கினார்.

இதன் நிறையில் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த அவர்,

பிரார்த்தனைக்காக கூடியிருந்தபோது தாக்கப்பட்ட கிறிஸ்தவர்களுடனான எனது நெருக்கத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன்.

இந்த கொடிய வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திக்கிறேன். பலியான அனைவரையும் இறைவனிடம் ஒப்படைக்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்