பைப் ரிப்பேர் செய்ய நதியில் இறங்கியவரின் இடுப்பை கவ்விய முதலை: பின்னர் நடந்த சோகம்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

நதிக்கடியில் செல்லும் பைப் ஒன்றை சரி செய்வதற்காக நதியில் இறங்கிய ஒருவரின் இடுப்பைக் கவ்வி தண்ணீருக்கடியில் இழுத்துச் சென்றது முதலை ஒன்று.

இந்தோனேஷியாவில் Darlin Uti (30) என்ற நபர் தண்ணீருக்கடியில் செல்லும் பைப் ஒன்றை சரி செய்வதற்காக நதிக்கடியில் இறங்கியிருக்கிறார்.

அப்போது ஒரு முதலை அவரது இடுப்பைக் கவ்வி இழுத்திருக்கிறது.

Darlinஉடன் இருந்த அவரது சகோதரி அவரைக் காப்பாற்ற எவ்வளவோ முயன்றும் முதலை அவரை கவ்வி இழுத்துக் கொண்டு தண்ணீருக்கடியில் விரைந்திருக்கிறது.

தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் Darlinஐத் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

ஒரு நாள் முழுவதும் தேடியும் Darlin கிடைக்காத நிலையில், மறுநாள் அதே முதலை தான் எவ்வாறு அவரது இடுப்பைக் கவ்விச் சென்றதோ அதேபோல் தண்ணீரின் மேலே வந்திருக்கிறது.

இதைக் கண்ட அதிகாரிகள் படகில் சென்று Darlinஇன் உடலை மீட்டு கொண்டு வந்திருக்கின்றனர்.

இடுப்புப் பகுதியில் கடி பட்டதால் இரத்தம் வெளியேறி அவரது உயிர் பிரிந்திருந்தது.

மற்றபடி எந்த காயமும் இன்றி முழுமையாக மீட்கப்பட்ட உடல் அவரது குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...