தன்னுடன் உறவு கொண்ட பெண்ணை சமைத்து சாப்பிட்ட மருத்துவர்: எதற்காக தெரியுமா?

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
807Shares

தன்னுடன் உறவு கொண்ட பெண், முன்பு ஆணாக இருந்தவர் என்ற உண்மை தெரியவந்ததால் வெறுப்புற்று அவரை கொன்று சமைத்து சாப்பிட்டார் ஒரு மருத்துவர்.

ரஷ்யாவைச் சேர்ந்த மருத்துவரான Mikhail Tikhonov (27), Nina Surgutskaya (25) என்ற அழகிய பெண்ணுடன் ஊர் சுற்றிய பின்பு அவளை தன்னுடைய அறைக்கு அழைத்துக் கொண்டு வந்தார்.

மதுபானம் அருந்தியபின் அந்த பெண்ணுடன் பாலுறவு கொள்ளும்போதுதான், அவள் பெண்ணல்ல, திருநங்கை என்பது தெரியவந்திருக்கிறது.

முன்பு ஆணாக இருந்து அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறியவருடன் தான் பாலுறவு கொள்கிறேன் என்ற எண்ணம் Mikhailக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.

படுக்கையில் இருக்கும்போதே உடனடியாக Ninaவின் கழுத்தை நெறித்து கொன்றிருக்கிறார் Mikhail.

இதற்கிடையில் தன் மகள் வீடு திரும்பாததால் பொலிசாருக்கு தகவல் அளித்திருக்கிறார் Ninaவின் தாயார்.

Ninaவைக் கொலை செய்த Mikhail, அவளது உடலை பல துண்டுகளாக வெட்டியிருக்கிறார்.

ஆத்திரம் அடங்காமல் அவளது உடலின் சில பாகங்களை சமைத்து சாப்பிட்டிருக்கிறார்.

பின்னர் உடல் பாகங்கள் சிலவற்றை மறைக்க முயலும்போது சரியாக பொலிசார் வந்திருக்கிறார்கள்.

தான் மனித மாமிசம் சாப்பிடுபவன் அல்ல என்று பொலிசாரிடம் தெரிவித்த Mikhail, உடல் பாகங்கள் சிலவற்றை கழிவறையில் போட்டு பிளஷ் செய்ததாக தெரிவித்திருக்கிறார்.

கொலை செய்ததற்காகவும், மனித உடலை கூறு போட்டதற்காகவும் Mikhailக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்