பல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

பாகிஸ்தானில் பல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண் மர்மமான முறையில் சடலமாக கிடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த அஸ்மாட் ஜொன்ஜோ என்கிற 22 வயது இளம்பெண் கடந்த 18ம் திகதியன்று தன்னுடைய பல் வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு சென்ற சில மணி நேரங்களில் ஜொன்ஜோவின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என அவருடைய தாய்க்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை கேள்விப்பட்ட அவருடைய தாய் வேகமாக மருத்துவமனைக்கு விரைந்து சென்றுள்ளார். அங்கு சென்றதும், ஜொன்ஜோ வேறு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அங்கு சென்று தீவிரமாக தேடும்பொழுது ஜொன்ஜோவின் உடல் சடலமாக கிடப்பதை பார்த்து அவருடைய தாய் கதறி அழுதிருக்கிறார்.

ஆரம்பத்தில் ஆண்டிபயாடிக் ஊசி எதிர்வினை காரணமாகவே ஜொன்ஜோ இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் அதன்பிறகு மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், ஜொன்ஜோ பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாக தெரியவந்தது.

இந்த சம்பவமானது நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் மனித உரிமைகள் தொடர்பான தேசிய ஆணைக்குழுவின் அனீஸ் ஹரூன், உண்மையிலேயே என்ன நடந்தது என்பதைக் கண்டறிந்து, பொறுப்பாளர்களை தண்டிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு எனக்கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனையில் பணிபுரியும் ஷாஜீப், ஆமிர், மற்றும் வாலி ஆகியோரை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சந்தேக நபரான மருத்துவர் Ayaz -ஐ பொலிஸார் தேடி வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்