தென் ஆப்பிரிக்காவில் கன மழை வெள்ளப்பெருக்கு: 60 பேர் உயிரிழப்பு

Report Print Abisha in ஏனைய நாடுகள்

தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி 60க்கு மேற்பட்டோர் உயிரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

தென் ஆப்பிரிக்காவின், கிழக்குப் பகுதியில் உள்ள துறைமுக நகரமான டர்பன் பகுதி பெரும் அழிவைச் சந்தித்துள்ளது.

அந்நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக குவாசுலு நடால் என்ற இடத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்தமாக, தொடரும் மழைக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 60 ஐ தாண்டியுள்ளதாக அவசரகால மருத்துவக் குழுவின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தென் ஆப்பிரிக்க அதிபர் ராமபோஸா பார்வையிட்டுள்ளார்.

மீட்பு பணிகள் துரித நடிவடிகையில் நடைபெற்று வருகின்றது.

Streets Flood As Rain south africa

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers