44 குழந்தைகளை பெற்றெடுத்த 39 வயது தாய்: சோகத்தில் மூழ்கிப்போன வாழ்க்கை!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக உகாண்டாவில் 44 குழந்தைகளை பெற்றெடுத்த 39 வயது தாய் தன்னுடைய குழந்தைகளை காப்பாற்றுவதற்காக தினம்தோறும் போராடி வருகிறார்.

உகாண்டாவை சேர்ந்த மரியாம் நாபாதன்சி (39) என்பவர், 12 வயதில் திருமணம் செய்துகொண்டதும் முதல் வருடத்தில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

அதன்பிறகு ஒரே பிரசவத்தில் ஐந்து முறை இரட்டையர்கள், நான்கு முறை மூன்று குழந்தைகள், 5 முறை நான்கு குழந்தைகள் என 44 குழந்தைகளை பெற்று ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அவருடைய கணவர் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் தனி ஒரு பெண்ணாக தன்னுடைய குழந்தைகள் அனைவரையும் வளர்த்து வருகிறார்.

இடர்பாடுகளுடன் கூடிய ஒரு வீட்டில் தான் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அவருடைய குழந்தைகளில் ஒரு சிலர் பொருளாதார சூழல் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, வேலைக்கு சென்று தாயின் சுமையை குறைத்து வருகின்றனர்.

தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான நிகழ்வுகள் குறித்து கூறிய மரியாம் நாபாதன்சி, பிறந்த பிஞ்சுக்குழந்தை முதற்கொண்டு என்னுடன் பிறந்த 4 பேர் மற்றும் தந்தையை விட்டு பிரிந்து என்னுடைய தாய் சென்றுவிட்டார்.

அப்பொழுதே என்னுடைய வாழ்க்கையில் கஷ்டம் அதிகரித்தது. சடலம் போலவே நாங்கள் வீட்டில் இருந்தோம். அப்பா இரண்டாவது திருமணம் செய்தபிறகு ஒருநாள் என்னுடைய சித்தி, சாப்பிடும் உணவில் விஷம் கலந்து கொடுத்துவிட்டார்.

அதனை சாப்பிட்ட அனைவரும் உயிரிழந்துவிட்டனர். அன்றைய தினம் தோழியின் வீட்டிற்கு சென்றிருந்ததால் நான் மட்டும் உயிர்பிழைத்துக்கொண்டேன். அந்த 7 வயதில் என்னுடைய குடும்பத்தினர் எப்படி இறந்தார்கள் என்பதை கூட என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் கூறிய பின்னரே புரிந்து கொண்டேன். பழையபடி என்னுடைய குடும்பத்தில் மீண்டும் 6 பேர் இருக்க வேண்டும். அதற்காக நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ள என முடிவு செய்தேன்.

திருமணத்திற்கு பிறகு முதல் இரட்டை குழந்தை பிறந்ததும், பிறப்பு கட்டுப்பாடு மாத்திரை கொடுக்குமாறு மருத்துவரிடம் கேட்டேன். ஆனால் அவர், சுகாதார பிரச்சினைகள் ஏற்படும் எனக்கூறி கொடுக்கவில்லை.

வழக்கத்திற்கு மாறான பெரிய கருப்பைகள் எனக்கு இருந்ததால், அடுத்தடுத்து குழந்தைகள் அதிகம் பிறந்தன. அதில் 6 குழந்தைகள் இறந்துவிட்டன.

இவர்கள் அனைவரையும் எப்படி காப்பாற்ற போகிறோம் என நினைத்துக்கொண்டிருந்த வேளையில் தான் கணவரும் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

அன்று முதல் வாழ்க்கை கண்ணீரில் மூழ்க ஆரம்பித்துவிட்டது. அதிகமான வேலைகளுக்கு சென்று குழந்தைகளை காப்பாற்ற ஆரம்பித்தேன்.

பொருளாதார சூழல் காரணமாக என்னுடைய குழந்தைகளும் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவருடைய மூத்த மகன் இவான் கிபுகா (23) கூறுகையில், அதிகமான வேலைகளால் அம்மா பெரிதும் சிரமப்படுகிறார். நாங்கள் வேலைக்கு சென்று சம்பாதித்தாலும், அவர் மீது அதிக அழுத்தம் விழுகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...