பிரபல ஆண் மொடலுக்கு மேடையில் நடந்த சோகம்!

Report Print Abisha in ஏனைய நாடுகள்

பேஷன் ஷோவில் கலந்துகொண்ட பிரபல மொடல், நிகழ்ச்சி நடந்த மேடையிலேயே உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

பிரபல பிரேசில் மொடல், Tales Soares. 26 வயதான இவர், பிரேசிலில் உள்ள Sao Paulo என்ற நகரில் நேற்று நடந்த பேஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மேடையில் பூனை நடை நடந்துவந்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார் சோரஸ்.

அப்போது எதிர்பாராத வகையில் திடீரென தரையில் விழுந்தார். இதில் அவர் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனை பார்த்து கொண்டிருந்தவர்கள், அது பேஷன் ஷோவில் ஒரு நிகழ்ச்சி என நினைத்துள்ளனர். சிறிது நேரம் கழித்துதான் அவர் கீழே விழுந்துவிட்டார் என்பது தெரியவந்தது.

பின்னர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

நிகழ்ச்சி மேடையிலேயே பிரபல மொடல் உயிரிழந்த சம்பவம் அங்கு பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்